5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி


5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
x

கனியாமூர் கலவர வழக்கில் கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கள்ளக்குறிச்சி கோர்ட்டு உத்தரவு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கனியாமூர் சக்திமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து 108 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்ததை அடுத்து 103 பேரை காணொலிகாட்சி மூலம் சிறையில் இருந்தபடியே போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்களை வருகிற 12-ந் தேதி வரை சிறைகாவலில் வைக்க கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் கைதானவர்களில் மீதமுள்ள சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம், செம்பாக்குறிச்சி சரண்குரு, ரங்கநாதபுரம் மணிகண்டன், மேலப்பட்டு பிரதீப், கடலூர் மாவட்டம் சிறுநெசவலூர் கோபு ஆகிய 5 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் திருச்சி சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோா்ட்டில் ஆஜர் படுத்தினர். மேலும் இவர்களை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணை செய்த பின்னர் மேற்படி 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அழைத்துசென்றனர்.


Next Story