பாறை உள்ள பகுதியில் ஏழைகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு


பாறை உள்ள பகுதியில் ஏழைகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு
x
தினத்தந்தி 27 July 2023 2:15 AM IST (Updated: 27 July 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே பாறை உள்ள பகுதியில் ஏழைகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே வேறு நிலம் வழங்க கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே பாறை உள்ள பகுதியில் ஏழைகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே வேறு நிலம் வழங்க கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வீட்டுமனை ஒதுக்கீடு

கிணத்துக்கடவு தாலுகாவில் கோவிந்தாபுரம், நெம்பர்.10 முத்தூர், சூலக்கல், நல்லட்டிப்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து அவர்களுக்கு, கோவிந்தாபுரத்தில் உள்ள கன்னியாபாறை பகுதியில் மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கீடு செய்தது. அங்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்த 10 பேருக்கும், நெம்பர்.10 முத்தூரை சேர்ந்த 27 பேருக்கும், சூலக்கலை சேர்ந்த 2 பேருக்கும், நல்லட்டிபாளையத்தை சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 40 பேருக்கு தலா 1 சென்ட் வீதம் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வேறு நிலம் வேண்டும்

ஆனால் அந்த நிலம், பாறை அமைந்துள்ள இடத்தில் உள்ளதால், அங்கு யாரும் இதுவரை வீடு கட்டவில்லை. அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் சார்பில் 12 பயனாளிகளுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் வீடு கட்ட யாரும் முன்வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அந்த பாறை உள்ள பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. அங்கு வீடு கட்டினால் அதிக செலவு ஏற்படும். அரசு வழங்கும் நிதி போதாது. எனவே கலெக்டர் நேரில் பார்வையிட்டு, வேறு நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story