வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு


வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு
x

ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் தொிவித்தார்.

திருப்பத்தூர்

ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் தொிவித்தார்.

ஒன்றியக்குழு கூட்டம்

திருப்பத்தூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவர் விஜியா அருணாசலம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் டி.ஆர்.ஞானசேகரன், முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

ஒன்றியக்குழு தலைவர்:- மாநில 15-வது நிதி குழு மூலம் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடி ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

லலிதா மோகன்குமார்:- ஜோதிமங்கலம் கிராமத்தில் முருகன் வட்டம் பகுதியில் 10 வீடுகள் உள்ளது அந்த வீடுகளுக்கு குடிநீர் பைப் அமைத்து தருவது சிக்கல் உள்ளது. எனவே அவர்களுக்கு பைப் லைன் அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்

துணைத்தலைவர்:- 10 வீடுகளுக்கு உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு அந்த பகுதியில் பைப்லைன் கொடுக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படும்.

புறக்கணிப்பு

டாக்டர். திருப்பதி:- ஒன்றிய பொது நிதி மற்றும் 15-வது நிதிக்குழு மானியம் அனைத்து வார்டுகளுக்கு சரிசமாக பிரித்து பணிகள் செய்ய வேண்டும்.

திருப்பத்தூர் ஒன்றியத்தில் ஒரு சில வார்டுகளுக்கு மட்டும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 11-க்கும் மேற்பட்ட வார்டுகள் புறக்கணிக்கப்படுகிறது. குறிப்பாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன.

நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படை தன்மை இங்கு இல்லை. எல்லாமே மறைமுகமாக செய்யப்படுகிறது. திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காக்கனாப்பாளையம் கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் மக்கள் அங்குள்ள ஆற்றை கடந்து செல்கின்றனர்.

ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருக்கும்போது பொதுமக்கள் ஆற்றை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே, அங்கு ஆற்றுப்பாலம் ஒன்றை கட்டி தர வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர்:- திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு நிதி அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

காக்கணம் பாளையம் ஆற்று பாலம் தற்காலிகமாக கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் பல்வேறு உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story