மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு!


மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு!
x

மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

சென்னைக்கு அடுத்தக்கட்டமாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான திட்டபணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில் சேவை அமைக்க நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு விரிவான செயல் திட்ட அறிக்கை தயாரிக்க ஆர்.வி. அசோசியேட் நிறுவனத்துக்கு ரூ.1.35 கோடிக்கான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4 நிறுவனங்கள் விண்ணப்பத்திருந்த நிலையில் ஆர்.வி அசோசியேட்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் இடம் உள்ளிட்ட அம்சங்களும் விரிவான திட்ட அறிக்கையில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 120 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என டெண்டரில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story