அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது - ஜி.கே.வாசன் பேட்டி
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி உடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார்.
சேலம்,
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுவை பொறுத்தவரை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் என இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
மேலும், இரு அணிகளும் தேர்தல் பணிக்குழுவை அறிவித்து தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் இருதரப்பின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
வரும் தேர்தலில் நிச்சயம் மாற்றம் நிகழும். அதிமுகவுடனான கூட்டணி தொடர்கிறது என்று கூறினார்.