கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடரில் முறைகேடு குற்றச்சாட்டு: சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்


கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடரில் முறைகேடு குற்றச்சாட்டு: சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
x

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் ஒளிவு மறைவு இன்றி செயல்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு 139 மாதிரிகள் அனுப்பப்பட்டன. அதில் 8 பேருக்கு பிஏ5 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேருக்கு பிஏ4 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடரில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து பதிலளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் ஒளிவு மறைவு இன்றி செயல்பட்டு வருவதாக விளக்கமளித்தார்.

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் ஒளிவு மறைவு இன்றியே டென்டர் விடுகிறது. மேலும் மத்திய அரசை ஒப்பிடும் போது மிகக் குறைந்த விலையிலேயே மருத்துவப் பொருட்கள் தமிழ்நாடு மருத்துவக் கழகத்திடமிருந்து வாங்கப்படுகிறது என்றும் கூறினார்.


Next Story