அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்


அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்
x

அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி விஜயகுமார் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடர் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், டான்சி நிர்வாக இயக்குனருமான விஜயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நமக்கு நாமே திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிமராமத்து பணிகள், என்னும் எழுத்தும் இயக்கம், மக்களை தேடி மருத்துவம், பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக விளிம்பு நிலை மக்களுக்கு மின் இணைப்பு வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

15 நாட்களுக்குள் அறிக்கை

கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மின்சார சுடுகாடு பயன்பாடு குறித்து செயல்திட்டம் தயார் செய்து 15 நாட்களுக்குள் பேரூராட்சி உதவி இயக்குனர் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள 485 பணிகளுக்கும் இந்த மாத இறுதிக்குள் நிர்வாக அனுமதி வழங்கப்படும்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சியில் 200 பணிகளும், கும்பகோணம் மாநகராட்சியில் 5 பணிகளும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 1 பணியும் அதிராம்பட்டினம் நகராட்சியில் 2 பணிகளும், பேரூராட்சிகளில் 17 பணிகளும் நவம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையர்கள் சரவணகுமார், செந்தில்முருகன், வருவாய் கோட்டாட்சியர்கள் பிரபாகர், லதா, ரஞ்சித், நகராட்சி ஆணையர்கள் சவுந்தரராஜன், குமார், முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரெங்கராஜன், வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story