திருவாரூரில் இருந்து இயக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகள் கண்டன ஊர்வலம்


திருவாரூரில் இருந்து இயக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகள் கண்டன ஊர்வலம்
x

திருவாரூரில் இருந்து இயக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகள் கண்டன ஊர்வலம்

திருவாரூர்

மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவாரூரில் இருந்து இயக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சேவை சங்கங்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

கண்டன ஊர்வலம்

மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ெரயிலை திருவாரூரில் இருந்து இயக்குவதற்காக ெரயில்வே துறை பரிசீலனை செய்து வருகிறது.

பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ெரயிலை மன்னார்குடியில் இருந்து தொடர்ந்து இயக்க வேண்டும் என்றும், மன்னார்குடியில் இயங்கி வரும் எந்த ெரயிலையும் மாற்றம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தி வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு சேவை சங்கங்கள் மற்றும் ஆட்டோ, கார், வேன், லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கங்கள் இணைந்து நடத்திய கண்டன ஊர்வலம் நேற்று மன்னார்குடியில் நடைபெற்றது.

கோரிக்கை விளக்க மனு

மன்னார்குடி தேரடியில் இருந்து புறப்பட்ட கண்டன ஊர்வலத்திற்கு மன்னார்குடி வர்த்தக சங்க தலைவர் ஆர்.வி.ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. சார்பில் அமைப்புச்செயலாளர் சிவா ராஜமாணிக்கம், நகர செயலாளர் ஆர்.ஜி. குமார், அ.ம.மு.க. சார்பில் நகர செயலாளர் ஆனந்தராஜ், தே.மு.தி.க. நகர செயலாளர் கார்த்திகேயன், விடுதலைச்சிறுத்தைகள் நிர்வாகி ரமணி, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி வேதா பாலா, லாரி உரிமையாளர் சங்க தலைவர் அய்யப்பன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள், அனைத்து கார் ஓட்டுனர் சங்கங்கள், நடைபயில்வோர் சங்கம் |நுகர்வோர் பாதுகாப்பு குழு என பல்வேறு சேவை அமைப்புகளை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். தேரடியில் புறப்பட்ட ஊர்வலம் கடைவீதி, காந்தி ரோடு வழியாக மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகம் சென்றடைந்து உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை விளக்க மனு அளிக்கப்பட்டது.


Next Story