பழைய குற்றாலம் அருவியில் இரவு முழுவதும் குளிக்க அனுமதி - மாவட்ட கலெக்டர் ஆகாஷ்


பழைய குற்றாலம் அருவியில் இரவு முழுவதும் குளிக்க அனுமதி - மாவட்ட கலெக்டர் ஆகாஷ்
x

பழைய குற்றாலம் அருவியில் இரவு முழுவதும் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்று காலையில் இருந்தே சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குனிந்த காற்று வீசியது. இடையிடையே சிறிது நேரம் வெயில் அடித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐந்தருவியில் நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் இந்த தடை நீட்டிக்கப்பட்டது. இன்று காலை 9-15 மணிக்கு வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர்.

தற்போது மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மட்டும் இரவிலும் சுற்றுலா பயணிகள் குளித்து வந்தனர். பழைய குற்றாலம் அருவியிலும் இரவில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் இன்று காலை உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.


Next Story