அகில இந்திய தொழிற்சங்க மாநாடு
அகில இந்திய தொழிற்சங்க மாநாடு நடைபெற்றது.
கரூர்
கரூரில் மாவட்ட அகில இந்திய தொழிற்சங்க ஏ.ஐ.டி.யூ.சி. மைய கவுன்சில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அந்தோணி முத்து தொடக்க உரையாற்றினார். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர படுத்த வேண்டும், அவுட்சோர்சிங் முறையை ஒழிக்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை பணியாளர்கள், தூய்மையாளர்களுக்கு அடையாள அட்டை, பச்சை அட்டை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அகில இந்திய பெண்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பிலோ மீனா, சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story