அரியலூர் கலெக்டர்: சிவன்-பெருமாள் கோவில்களில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம்


அரியலூர் கலெக்டர்: சிவன்-பெருமாள் கோவில்களில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம்
x
தினத்தந்தி 4 Jan 2023 1:23 AM IST (Updated: 4 Jan 2023 12:18 PM IST)
t-max-icont-min-icon

சிவன்-பெருமாள் கோவில்களில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் மாற்று சமுதாயத்தினரை சேர்ந்தவர்கள் வழிபட முடியாத நிலை உள்ளது என்று ஒரு பிரிவினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சொக்கநாதபுரம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2019-ம் ஆண்டு ஒரு பிரிவினர் திருமண நிகழ்ச்சியின்போது பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு பிரிவினர் தட்டிக் கேட்டபோது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ஒரு தரப்பினர் தங்களிடம் இருந்த கோவில் சாவியை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டனர். பின்னர் ஒரு பிரிவினர் மட்டுமே அதிகளவில் கோவிலுக்கு வருவதும், மற்றொரு பிரிவினர் குறைந்த அளவில் வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மற்றொரு பிரிவினரையும் சாமி கும்பிட உத்தரவிட வேண்டும் என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தினர். அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள், கோவிலுக்குள் சாமி கும்பிட வருபவர்களை தடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். யாரையும் சாமி கும்பிட வரும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அனைத்து சமூகத்தினரும் எவ்வித பாகுபாடுமின்றி சென்று வழிபட எவ்வித தடையும் இல்லை என்றும், இதனால் எவ்விதமான சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை என்பதும், சொக்கநாதபுரத்தில் கோவில்களுக்கு சென்று வழிபட எந்த சமூகத்தினரையும், இதுவரை யாரும் தடை ஏற்படுத்தப்படவில்லை என்பதும், அனைத்து சமூகத்தினரும் சுமூகமாக வழிபட்டு வருகின்றனர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து சொக்கநாதபுரம் கிராமத்தில் உள்ள பெருமாள் மற்றும் சிவன் கோவில்களில் அனைத்து சமூகத்தினரும் எவ்வித தடையுமின்றி சென்று வழிபடலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி அறிவித்துள்ளார்.


Next Story