ஆலத்தூர் அரசு ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு


ஆலத்தூர் அரசு ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
x

ஆலத்தூர் அரசு ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய (ஐ.டி.ஐ.) மாணவ-மாணவிகளுக்கு போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் கலந்து கொண்டு பேசுகையில், மாணவ-மாணவிகள் கட்டாயம் கல்வி கற்றால் தான் சிறந்த மனிதனாகவும், சிறப்பன ஆற்றல் மிக்கவராகவும், நல்லெண்ணம், நற்செயல், நற்பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஒரு நபராக இருக்க முடியும். மேலும் தீண்டாமை, சாதிய பாகுபாடுகள், இரட்டை குவளை முறை மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவைகளே இல்லாத மனிதாபிமான மிக்க சமூகத்தை உருவாக்க வேண்டுமெனில் மாணவர்களாகிய நீங்கள் தான் அதற்கான முழு முயற்சியை முன்னெடுக்க வேண்டும். இந்த சமூகத்தில் அனைவரும் சமம் என்றார். மேலும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து மாணவ-மாணவிகளிடம் அவர் கலந்துரையாடினார்.


Next Story