ஏ.ஐ.டி.யு.சி. பொதுக்குழு கூட்டம்
நெல்லையில் ஏ.ஐ.டி.யு.சி. பொதுக்குழு கூட்டம் நடந்தது.
நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட குழு மற்றும் கிளைச்சங்க நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் நெல்லையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநில தலைவர் காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 100-வது ஆண்டு மே தினத்தை முன்னிட்டு மே 1-ந்தேதி அன்று பாளையங்கோட்டை எல்.ஐ.சி. அலுவலகத்தில் இருந்து லூர்துநாதன் சிலை வரை பேரணியாகச் சென்று பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து திருச்சியில் மே 6-ந் தேதி நடைபெறும் அனைத்து தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொள்வது, 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை அரசு திரும்ப பெற வேண்டும். 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன், ஜூலை மாதங்களில் பிரசாரம் மேற்கொள்வது, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.