கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகுசேலத்தில் இருந்து இன்று முதல் விமான சேவைபெங்களூரு-கொச்சிக்கு இயக்கப்படுகிறது


கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகுசேலத்தில் இருந்து இன்று முதல் விமான சேவைபெங்களூரு-கொச்சிக்கு இயக்கப்படுகிறது
x

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் இருந்து பெங்களூரு-கொச்சிக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் விமான சேவை ெதாடங்குகிறது.

சேலம்

சேலம்

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் இருந்து பெங்களூரு-கொச்சிக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் விமான சேவை ெதாடங்குகிறது.

விமான சேவை

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு விமானம் இயக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் விமான சேவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின், ஐதராபாத், சென்னை போன்ற நகரங்களுக்கு விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இன்று (திங்கட்கிழமை) முதல் சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கொச்சின் மற்றும் ஐதராபாத்துக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதனால் சேலம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெங்களூரு-கொச்சி

அதாவது, பெங்களூரு - சேலம் -கொச்சி வழித்தடத்திலும், அதேபோல், கொச்சி - சேலம் -பெங்களூரு வழித்தடத்திலும் விமானம் இயக்கப்படும். வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமை தவிர மற்ற 5 நாட்களில் இந்த விமான சேவை உண்டு.

இந்த மாதம் இறுதியில் இன்டிகோ நிறுவனம் சார்பில் 29-ந் தேதி முதல் பெங்களூரு - சேலம் - ஐதராபாத் வழித்தடத்திலும், மறுமார்க்கமாக மீண்டும் ஐதராபாத் - சேலம் - பெங்களூரு வழித்தடத்திலும் விமானம் இயக்கப்பட உள்ளது.

திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என வாரத்தின் 4 நாட்களுக்கு இண்டிகோ விமான சேவை நடைபெறும். அதேநேரத்தில் வருகிற 29-ந் தேதி முதல் தினமும் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

வரவேற்பு நிகழ்ச்சி

பெங்களூருவில் இருந்து கொச்சி செல்லும் விமானம் இன்று மதியம் 1.40 மணிக்கு சேலம் வந்தடைகிறது. அந்த விமானத்துக்கு காமலாபுரம் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. மற்றும் விமான நிலைய அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.


Next Story