விமானப்படையில் சேர வழிகாட்டல் நிகழ்ச்சி


விமானப்படையில் சேர வழிகாட்டல் நிகழ்ச்சி
x

திருவாரூர் அருகே விமானப்படையில் சேர வழிகாட்டல் நிகழ்ச்சி 23-ந் தேதி நடக்கிறது.

திருவாரூர்


திருவாரூர் அருகே விமானப்படையில் சேர வழிகாட்டல் நிகழ்ச்சி 23-ந் தேதி நடக்கிறது.

இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய விமானப்படை

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் அக்னிவீர வாயு பதவிக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு 15 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான இணைய வழித்தேர்வு வருகிற மே மாதம் 20-ந் தேதி நடக்கிறது. 2002-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் 2006-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதிக்கு முன் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்வி தகுதி குறித்த விவரங்கள் விளம்பர அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி(வௌ்ளிக்கிழமை) கடைசி நாளாகும். உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 செ.மீ. உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய 3 முறைகளில் தோ்வு நடக்கிறது. எனவே தகுதியுள்ளவர்கள் agnipathvayu.cdac.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

முன்பதிவு

இதுகுறித்த வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு 23- ந் தேதி (வியாழக்கிழமை) மன்னார்குடி சாலை, விளமல் ஆர்.வி.எல். நகரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடக்கிறது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 7538885270 என்ற வாட்ஸ் அப் எண் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story