விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:30 AM IST (Updated: 26 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

வள்ளுவக்குடி ஊராட்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்.

மயிலாடுதுறை

வள்ளுவக்குடி ஊராட்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வள்ளுவக்குடி, ஆதமங்கலம், அத்தியூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் இணை இயக்குனர் ராஜராஜன் வரவேற்று பேசினார்.

கண்காட்சி

இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனருமான அமுதவல்லி கலந்து கொண்டு 30 விவசாயிகளுக்கு தென்னங்கன்று முழு மானிய விலையிலும், 14 விவசாயிகளுக்கு ஜிப்சம், சிங்க்சல்பேட், விசை தெளிப்பான், பாசி பயறு 50 சதவீத மானியத்திலும் வழங்கினார்.


Next Story