பண்ருட்டியில்விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பண்ருட்டியில்விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

பண்ருட்டியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டியில் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும், வீடு இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், 60 வயது முதிர்ந்த விவசாய தொழிலாளர்களுக்கு நிபந்தனை இன்றி மாதந்தோறும் ஒய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு தணிகாசலம், ஆறுமுகம், குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் துரை, மாவட்ட பொருளாளர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டக்குழு குணசேகரன், ஞானசேகர், மோகன், பொறுப்பாளர்கள் வெங்கடேசன், தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மணிவண்ணன் நன்றி கூறினார்.


Next Story