விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

தேனியில், விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கக்கோரி தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சங்கரசுப்பு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, தாலுகா செயலாளர் தர்மர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது 100 நாட்கள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story