வேளாண் சிறப்பு முகாம்


வேளாண் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:30 AM IST (Updated: 25 Jun 2023 4:38 PM IST)
t-max-icont-min-icon

கடையம் வட்டாரத்தில் வேளாண் சிறப்பு முகாம் நடைபெற்றது

தென்காசி

கடையம்:

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு தேர்வு ஆகியுள்ள துப்பாக்குடி பஞ்சாயத்து அம்மன் கோவில் வளாகம், அணைந்தபெருமாள்நாடானூர் பஞ்சாயத்து செல்லபிள்ளையார்குளம் கிராமம் ஆகிய இடங்களில் வைத்து அனைத்து அரசு துறைகளின் சிறப்பு முகாம் நடைபெற்றது. துப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் செண்பகவல்லி ஜெகநாதன், அணைந்தபெருமாள்நாடானூர் பஞ்சாயத்து தலைவர் அருணாசலம் என்ற அழகுதுரை தலைமை தாங்கினார்கள். கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி முன்னிலை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் வரவேற்று பேசினார். ஆர்.வி.எஸ். ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுகுமார், ஆலங்குளம் விதை சான்று அலுவலர் சந்துரு, வேளாண்மை பொறியியல் துறை பொறியாளர் கருப்பசாமி, கால்நடை துறை சார்பில் கால்நடை ஆய்வாளர்-2 கிருஷ்ணவேணி, கிராம நிர்வாக அலுவலர் இசக்கிமுத்து, தோட்டக்கலை உதவி அலுவலரும், துப்பாக்குடி நோடல் ஆபீசருமான கோவிந்தராஜ், வேளாண்மை உதவி அலுவலரும் அணைந்தபெருமாள்நாடானூர் நோடல் ஆபீசருமான தீபா, தோட்டக்கலை உதவி அலுவலர் திருமலைக்குமார், வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் பொன்ஆசீர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டார்கள். மாரியப்பன் என்ற விவசாயிக்கு பவர்டில்லர் எந்திரம் மானிய விலையில் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் செய்திருந்தார்.

மேலும் கடையம் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டு தேர்வு ஆகியுள்ள மற்ற பஞ்சாயத்துகளான திருமலையப்பபுரம் முதலியார்பட்டி, தெற்குமடத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு முகாம் மேற்படி பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story