விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்
விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே ஆரூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அட்மா குழு தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்யராஜ், வேளாண்மை அலுவலர் கிருஷ்ணகுமாரி, ஒன்றிய கவுன்சிலர் பொன்னிஅண்ணாமலை, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமேஷ்குமார், விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி அலுவலர் செல்வகுமார் வரவேற்றார். இதில் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் இடுபொருட்களும், கைத்தெளிப்பான் மற்றும் விசைத்தெளிப்பான் ஆகியவற்றை வழங்கினார். இதில் உதவி தோட்டக்கலை அலுவலர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் சங்கர், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் தங்கம், அண்ணாமலை மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.