விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்
சங்கராபுரம் அருகே விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே கீழப்பட்டு கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருள் மற்றும் மருந்து தெளிப்பான் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சுகன்யா சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி அலுவலர் பழனிவேல் வரவேற்றார். வேளாண்மை விதைச்சான்று அலுவலர் தேவி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் இடுபொருட்கள்,கைத்தெளிப்பான் மற்றும் விசைத்தெளிப்பான் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் வேளாண்மை உதவி அலுவலர் மாரிமுத்து மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story