உழவர்களின் நலன்களை பாதுகாக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
உழவர்களின் நலன்களை எப்போதும் பாதுகாக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார் முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக உழைத்தவர் கலைஞர். கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித்திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படும்.
குறுவை சாகுபடிக்காக நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விவசாயிகளை பெருமைப்படுத்தியது திமுக அரசு. விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. உழவர்களின் நலன்களை எப்போது பாதுகாக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது என்றார்.
இருபோக சாகுபடி பரப்பை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த திட்டம், பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,997 கிராமப் பஞ்சாயத்துகளில் 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் என்றார்.