தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மென்பொருள் பயிற்சி வகுப்பு தொடங்க ஒப்பந்தம்


தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மென்பொருள் பயிற்சி வகுப்பு தொடங்க ஒப்பந்தம்
x

தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மென்பொருள் பயிற்சி வகுப்பு தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழ்நாடு இன்பர்மேஷன் கம்யூனிகேசன் டெக்னாலஜி அகாடெமியின் (ஐ.சி.டி. அகாடெமி) சார்பில் மதுரையில் பிரிட்ஜ் 2023-ன் 52-வது பதிப்பு மாநாடு நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் சீனிவாசன் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா உள்பட கல்லூரி பேராசிரியர்கள் இந்தநிகழ்வில் கலந்து கொண்டனர். "டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மனித மூலதனத்தை உருவாக்குதல்" என்பதே இக்கருத்தரங்கின் மையபொருளாகும். இந்நிகழ்வில் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கி, மனித மூலதனத்தை பெருக்கி டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சாத்திய கூறுகளை எடுத்துரைத்தார். இதில் பல்வேறு மென்பொருள் நிறுவனத்தலைவர்கள், ஐ.சி.டி. அகாடெமி நிறுவனர் மற்றும் நிர்வாக துணைத்தலைவர்கள், ஐ.சி.டி. அகாடெமியில் உறுப்பினர்களாக உள்ள முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஐ.சி.டி. அகாடெமியின் பங்களிப்புடன் கணினித்துறையில் "மைக்ரோசாப்ட் பவர் பி.ஐ. டேட்டா அனலிஸ்ட்" என்ற பயிற்சி வகுப்பை தொடங்க ஐ.சி.டி. அகாடெமி நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மென்பொருளின் மூலம் பல வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் மாணவர்களுக்கு தேவையான பாடங்களை கற்றுத்தரப்படும். இந்த மென் பொருளை படிப்பதின் மூலம் மாணவிகளுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரமுடியும். இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாண்பமை வேந்தர் சீனிவாசனை சந்தித்து ஆசி பெற்றனர்.


Next Story