பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அரசு பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் பால்பாண்டியன் கூறினார்.

தஞ்சாவூர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அரசு பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் பால்பாண்டியன் கூறினார்.

மாநில செயற்குழு

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. மாநில செயலாளர் முருககுமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் வேழவேந்தன், நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ரமேஷ், வடிவேல், செல்வராஜ், சக்கரவர்த்தி, மாவட்ட மகளிரணி தலைவி கலைச்செல்வி, செயலாளர் அழகுராணி, லிங்குசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில சிறப்பு தலைவர் பால்பாண்டியன், சங்க ஆலோசகர் தரும.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பால்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பழைய ஓய்வூதிய திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்த முன்வந்துள்ளன. அதே போல தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். 8-வது ஊதியக்குழுவின் ஊதிய மாற்றத்தில் 21 மாத கால ஊதியத்தை வழங்காமல் இருப்பது இயற்கைக்கு விரோதமானது. இதனை உடனே வழங்க வேண்டும். 4 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்.

மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

அரசின் அனைத்து காலிப்பணியிடங்களையும் டி.என்.பி.எஸ்.சி.யின் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும். விடுதி பணியாளர்களை உடனடியாக பணி வரன்முறை செய்ய வேண்டும். வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் செய்யப்படும் பணியாளர்கள் கலந்தாய்வு மூலம் துறைகளை தேர்வு செய்யும் நடைமுறை போல் பணியாற்றும் இடங்களையும் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் ஏப்ரல் 28-ந்தேதி திருச்சியில் மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் மாவட்ட துணை செயலாளர் முரளிகுமார் நன்றி கூறினார்.


Next Story