ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

திருவையாறு:-

பொது வினியோகத்திட்டத்திற்கென தனித்துறை உருவாக்க வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவையாறு தாலுகா அலுவலகம் முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு நியாயவிலைகடை பணியாளர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் அறிவழகன், மாவட்ட செயலாளர் கரிகாலன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story