கனியாமூர் தனியார் பள்ளியில் 67 நாட்களுக்குப் பிறகு மறு சீரமைப்பு பணிகள் தொடக்கம்...!


கனியாமூர் தனியார் பள்ளியில் 67 நாட்களுக்குப் பிறகு மறு சீரமைப்பு பணிகள் தொடக்கம்...!
x

கனியாமூர் தனியார் பள்ளியில் 67 நாட்களுக்குப் பிறகு மறு சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர். இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கலவரத்தின் போது சிதைந்து போன பள்ளியை சீரமைப்பது தொடர்பான அனுமதியை வழங்கி மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் உத்தரவிட்டார். பள்ளியின் மறுசீரமைப்பு செய்ய 45 நாட்கள் அனுமதி வழங்கியும், பள்ளி கட்டடங்களை மறுசீரமைப்பு தவிர இதர பணிகளை மேற்கொள்வது ஐகோர்ட்டு உத்தரவுக்கு உட்பட்டது என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கலவரத்தில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி போலீஸ் பாதுகாப்புடன் 68 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story