ஏத்தர் எனர்ஜி ஸ்கூட்டர் கிளை திறப்பு விழா


ஏத்தர் எனர்ஜி ஸ்கூட்டர்   கிளை திறப்பு விழா
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஏத்தர் எனர்ஜி ஸ்கூட்டர் கிளை திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் ஆசீர் மோட்டார்சின் ஒரு பிரிவான ஏத்தர் எனர்ஜி ஸ்கூட்டர் கிளை திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு ஏத்தரின் தலைமை வணிக அதிகாரி ரவ்னீத் சிங் போகலே தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நிறுவன நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். ஆசீர் குழும நிர்வாக இயக்குனர் பிரவீன் ராஜகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்தியாவின் புதிய எழுச்சியான எலக்ட்ரிக் வெகிக்கிளின் முன்னோடி ஏத்தர் எனர்ஜியுடன் இணைவதிலும், சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்குவதில் பங்கு கொள்வதிலும் பெருமை அடைகிறோம். ஏத்தர் ஸ்கூட்டர்கள் புதுமையான தயாரிப்பு, சார்ஜிங் உட்கட்டமைப்பு, வாடிக்கையாளர் சேவை ஆகியவை புதிய அனுபவத்தை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனம் பெரும்பாலான பெட்ரோல் ஸ்கூட்டர்களின் மாத செலவை விட மிகவும் குறைவாக இருக்கும். ஏத்தர் 450எக்ஸ் ஜென்3, ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 32-க்கும், 450 பிளஸ் ஜென்3, 1 லட்சத்து 36 ஆயிரத்து 522-க்கும், பல முன்னணி வங்கிகளின் எளிய கடன் வசதியுடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தொடர்ச்சியாக நிறுவப்படும் சார்ஜிங் நெட்வொர்க், வீடுகளில் நிறுவ பயன்படும் சார்ஜிங் யூனிட் அமைப்பதில் ஏத்தர் எனர்ஜி முழுவேகத்துடன் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

விழாவில் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நிதிநிறுவனத்தினர், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

---


Next Story