வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வேடசந்தூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
சமீபத்தில் சென்னை, தூத்துக்குடியில் வக்கீல்கள் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும், இந்த சம்பவங்களில் ஈடுபட்ட கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் வக்கீல்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரியும் வேடசந்தூர் வக்கீல்கள் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் வேடசந்தூர் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் சங்க செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தலைவர் முருகேசன், பொருளாளர் தெய்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் கோஷங்களை எழுப்பினர். இதேபோல் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை)யும் கோர்ட்டு புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபடுகின்றனர்.
Related Tags :
Next Story