வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x

வேலூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

சோளிங்கரை சேர்ந்த வக்கீல் நாதமுனியை ரவுடிகள் தாக்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும், வக்கீல் நாதமுனி அளித்த புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அதன்படி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் பணிபுரியும் வக்கீல்கள் பலர் கோர்ட்டை புறக்கணித்தனர். இதன் காரணமாக வழக்கமான கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன. இதனை அறியாமல் கோர்ட்டிற்கு வழக்கு தொடர்பாக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story