வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

திருப்பூரில், அரசு பெண் வக்கீல் ஜமிலா பானுவையும், அவரது மகளையும் அரிவாளால் வெட்டியவர்கள் மீது போலீசார் உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த கோர்ட்டில் பணியாற்றும் வக்கீல்கள் நேற்று ஒரு நாள் மட்டும் கோா்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மயிலாடுதுறை வக்கீல்கள் சங்கம் மற்றும் வக்கீல்கள் நலச்சங்கத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர். இதனால் மயிலாடுதுறை கோர்ட்டு வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story