ஆலோசனை கூட்டம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் 1000-வது ஆண்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் 1000-வது ஆண்டு விழா நடத்துவது குறித்தும், கோவிலில் அடிப்படை வசதிகள் குறித்தும் பல்வேறு சமுதாய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் நடந்தது. ம.தி.மு.க. தலைமை கழக செயலர் துரை வைகோ தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சங்கரநாராயண சுவாமி கோவிலில் 1000-வது ஆண்டு விழா கொண்டாட வேண்டும். 14 ஆண்டுகள் முடிந்தும் குடமுழுக்கு நடத்தாததால் உடனே குட முழுக்கை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களுக்கு கழிப்பிட வசதி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற கோவில் பணியாளர்களுக்கு ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து கூறினோம். அவர் உடனே நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்றார்.
கூட்டத்தில் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞரணி துணை செயலாளர் இசக்கியப்பன், நகரச் செயலாளர் ஆறுமுகச்சாமி, துணைச் செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரத்தினக்குமார், அரசு வழக்கறிஞர் சுப்புராஜ், தேர்தல் பணி குழு துணைச் செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.