விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை


விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 1 Aug 2023 1:00 AM IST (Updated: 1 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம், கம்பத்தில் நேற்று நடைபெற்றது.

தேனி

இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம், கம்பத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தேனி மாவட்ட பொதுச்செயலாளர் மாயலோகநாதன் தலைமை தாங்கினார். கம்பம் நகர தலைவர் பிரதாப் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன்.இரவி கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி கம்பத்தில் உள்ள முக்கிய வீதிகளில் அரசின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு விநாயகர் சிலை வைத்து வழிபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story