எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பாஜகவினர் தீ வைத்து எரித்ததை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்


எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பாஜகவினர் தீ வைத்து எரித்ததை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்
x

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் உருவப்படத்தை பாஜகவினர் தீ வைத்து எரித்தனர்.

தூத்துக்குடி,

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று முன் தினம் அதிமுகவில் இணைந்தார்.

அவர் இணைந்த அடுத்த நாளே நேற்று பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே, மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக பாஜக தலைவர் அண்ணாமலை,

ஒவ்வொரு வினைக்கு எதிர்வினை உண்டு என்றும், பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க வந்துள்ளேன். எந்த நிலையிலும் பாஜக தங்களை ஒரு ஜூனியர் கூட்டணியாக பார்க்கமாட்டோம். என் உடம்பில் ரத்தம் இருக்கும்வரை கூட்டணியில் இருந்தாலும் ஜூனியர் கூட்டாளி... படிந்து போக வேண்டும் என்பது அண்ணாமலை ரத்தத்திலேயே கிடையாது' என்று உடனான அதிமுக உடனான கூட்டணியை மறைமுகமாக விமர்சித்தார்.

அண்ணாமலையில் பேச்சு அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து பாஜக விலகும் நிலைக்கு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜக நிர்வாகிகள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த பின் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருந்த சிலர் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்வு நடந்த சில மணி நேரங்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியில் உருவப்படத்தை பாஜக நிர்வாகிகள் 4 பேர் தீ வைத்து எரித்தனர்.

'எங்கள் முதல்வர் அண்ணாமலை....' 'எடப்பாடி_ஒரு_துரோகி' என்ற போஸ்டரை ஒட்டிய பாஜகவினர் 4 பேரும் அந்த போஸ்டர் முன் நின்று எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை தீ வைத்து எரித்து அவருக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினர் 4 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை தீ வைத்து எரித்த பாஜக நிர்வாகிகளை கண்டித்து கோவில்பட்டியில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக அதிமுகவினர் போலீசில் புகார் அளித்தனர்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை பாஜகவினர் தீ வைத்து எரித்த சம்பவமும் இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்திய சம்பவமும் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story