அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி


அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை நகர அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை நகர அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். சுரண்டை 27 வார்டு செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். சுரண்டை நகர செயலாளர் வி.கே.எஸ்.சக்திவேல் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி.பிரபாகரன், மாநில பேச்சாளர்கள் லட்சுமணன், பாலமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சலூன் பணியாளர்களுக்கு ரோலிங் சேர், தையல் மிஷின், விவசாயிகளுக்கு பவர்ஸ்பிரேயர், மண்வெட்டி, தென்னங்கன்று, சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, பெண்களுக்கு இலவச சேலை உள்ளிட்டவற்றை மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், நகர செயலாளர் வி.கே.எஸ்.சக்திவேல் ஆகியோர் வழங்கினர். மொத்தம் 1,500 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், இணைச் செயலாளர் முத்துலட்சுமி, வீரபாண்டியன், சாமிநாதன், அமல்ராஜ், இருளப்பன், சிவசங்கர், ஜெயச்சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுரண்டை நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.


Next Story