சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் - மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி
சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி தெரிவித்துள்ளார்.
தென்காசி
கடையநல்லூர்:
தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு சங்கரன்கோவில் சேர்ந்தமரம் சாலையில் 18-ம்படி கருப்பசாமி கோவில் அருகே பிரமாண்டமாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
எனவே இந்த பொதுக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story