பேரூராட்சிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து பேரூராட்சிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கட்டண உயர்வை கண்டித்து பேரூராட்சிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்நடந்தது.
ஏத்தாப்பூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன் வரவேற்று பேசினார். பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சின்னத்தம்பி, துணைத்தலைவர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் தங்கமணி ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
இளங்கோவன்
இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தி.மு.க. சட்டமன்ற தேர்தலின் போது, பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்து தற்போது மக்களை ஏமாற்றி வருகிறது. மகளிருக்கு மாதம் ரூ.1,000 தருவதாக அறிவித்து 17 மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை. மின் கட்டணம், பால் விலை, சொத்து ஆகியவற்றை உயர்த்தி மக்களை பாதிப்படைய செய்துள்ளனர் என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட இணை செயலாளர் வாசுதேவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், ஏத்தாப்பூர் கூட்டுறவு வங்கி தலைவர் குமார், நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சரத்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜோதீஸ்வரன், கிளை செயலாளர் லோகநாதன் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் செயலாளர் ராஜமாணிக்கம் நன்றிகூறினார்.
வீரகனூர்
தலைவாசலை அடுத்த வீரகனூர் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவ சிலைக்கு எதிரில் வீரகனூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் .தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், வீரகனூர் நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் சேலம் புறநகர் மாவட்ட பொருளாளர் ஜெகதீசன் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வீரகனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சிவக்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் முத்துலிங்கம், மாவட்ட ெஜயலலிதா பேரவை துணைத் தலைவர் கணேசன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயராமன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், நாவக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பாலு, லத்துவாடி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி குழந்தைவேல், முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர் திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற தலைவர்கள் வரகூர் ராமசாமி, பெரியேரி சேகர், சிறுவாச்சூர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அயோத்தியாப்பட்டணம்
அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சித்ரா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.பி.மணி, ஒன்றிய அவைத்தலைவர் பொன்.தனபாலன், பேரூர் செயலாளர் ரவி சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் அருண்குமார், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி பாபு, முன்னாள் நகர செயலாளர் பெரியசாமி, தகவல் நுட்ப பிரிவுஒன்றிய செயலாளர் ஹரி, கூட்டுறவு வீடு கட்டும் சங்க தலைவர் பன்னீர்செல்வம் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர். இதே போன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு பேரூராட்சிகளிலும் நேற்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.