அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்


அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காட்டில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காட்டில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் சிவ மனோகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி நிர்வாகிகள் அகோர மூர்த்தி, சிவக்குமார், ரவி, குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். இதில் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி பாரதி கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் செல்லத்துரை, ஒன்றிய நிர்வாகிகள் திருமாறன், நடராஜன், சிவ தாஸ் மாறன், சந்திரசேகரன், துரை கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிவ செந்தமிழ்தாசன் நன்றி கூறினார்.


Next Story