அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
செங்கோட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டையில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நெல்லை, தென்காசி மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு கனிமவள கொள்ளையைக் கண்டித்து வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தென்காசி வடக்கு மாவட்ட, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மகளிரணி துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்முகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story