அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
சேரன்மாதேவியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, பொதுக்குழு உறுப்பினர் செவல் முத்துசாமி, சேரன்மாதேவி நகர செயலாளர் வக்கீல் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிசெல்வம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சினிமா நடிகர் கஞ்சா கருப்பு, தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு அ.தி.மு.க ஆட்சியின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சேரன்மாதேவி இசக்கிபாண்டியன், தமிழரசி, மணிமுத்தாறு சிவன்பாபு, ஒன்றிய கவுன்சிலர் ராகவன், அம்பை ஒன்றிய செயலாளர் விஜய பாலாஜி, ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின், நகர செயலாளர்கள் அம்பை அறிவழகன், கல்லிடைக்குறிச்சி முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.