அ.தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு கத்திக்குத்து


அ.தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 3 Sept 2023 12:30 AM IST (Updated: 3 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே அ.தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு கத்திக்குத்து விழுந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே அ.தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு கத்திக்குத்து விழுந்தது.

அ.தி.மு.க. கவுன்சிலர்

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் பாப்பான்குளம் பாட்டத்தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி தங்கம் (வயது 36). இவர் கடையம் யூனியன் 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

இவருக்கும், பாப்பான்குளம் மலையான் தெருவை சேர்ந்த துரைப்பாண்டி மகன் பரமசிவன் (26) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கத்திக்குத்து

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் கடையம் யூனியனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தங்கம் தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பினார்.

கடையத்தை அடுத்த ஏ.பி.நாடானூர் விலக்கு அருகே சென்றபோது அவரை பின்தொடர்ந்து வந்த பரமசிவன் தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், தங்கத்தை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ெதாடர்ந்து இன்ஸ்பெக்டர் கவுதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பரமசிவனை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story