அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
x

வந்தவாசி அருகே அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே பிருதூர் மற்றும் வழூர் கிராமத்தில் வந்தவாசி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக அமைப்பு செயலாளரும், மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு பூத் கமிட்டி அமைத்து அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர், பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு தற்போது தகுதியானவர்களுக்கு மட்டும் தான் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறுகிறார்கள் என்றார்.

கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஏ.கே.எஸ்.அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார், ஒன்றிய செயலாளர் லோகேஸ்வரன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story