அ.தி.மு.க. மாநாடு வெற்றி:பழமுதிர்சோலையில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நடந்தது


அ.தி.மு.க. மாநாடு வெற்றி:பழமுதிர்சோலையில்  தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நடந்தது
x

அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதை முன்னிட்டு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பழமுதிர்சோலையில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

மதுரை


அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதை முன்னிட்டு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பழமுதிர்சோலையில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

சிறப்பு பூஜை

மதுரையில் கடந்த 20-ந் தேதி அ.தி.மு.க. மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். பல லட்சம் பேர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாடு வெற்றி பெற்றதை முன்னிட்டு, மதுரை கிழக்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் அறுபடை வீடான பழமுதிர்சோலையில் எடப்பாடி பழனிசாமி பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கட்சியின் அமைப்பு செயலாளர் ஜக்கையன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் ஆகியோர் தங்கத்தேரை இழுத்து வழிபாடு நடத்தினர். அதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் நிலையூர் முருகன், பொன்ராஜேந்திரன், தக்கார் பாண்டி, வெற்றிச்செழியன், பொன்னுச்சாமி, குலோத்துங்கன், வாசு, கார்சேரி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்னதானம்

இது குறித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

மதுரை அ.தி.மு.க. மாநாடு, மதுரை கிழக்கு புறநகருக்கு உட்பட்ட பகுதியான வலையங்குளம் ரிங்ரோட்டில் நடந்தது. இந்த மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும் என்று ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனின் வேண்டுதலாக இருந்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த மாநாடு மிக சிறப்பாக நடந்து முடிந்தது. மதுரையில் சித்திரை திருவிழாவின் போது தான் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அதே போல் அ.தி.மு.க. மாநாட்டிற்கு தான் பல லட்சம் மக்கள் ஒன்று கூடினார்கள். இதுவரை மதுரையில் இவ்வளவு எழுச்சியாக ஒரு மாநாடு நடந்தது இல்லை என்ற வரலாற்று சாதனையை அ.தி.மு.க. படைத்தது. மக்களும், தொண்டர்களும் அ.தி.மு.க. மாநாட்டில் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து மாநாடு நடந்த இடத்திற்கு எதிரே உள்ள கருப்பசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு ராஜ் சத்யன் ஏற்பாட்டின் பேரில் 51 கிலோ மணி கட்டப்பட்டது. தற்போது பழமுதிர்சோலையில் சிறப்பு வழிபாடு நடத்தி தங்கத்தேர் இழுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story