அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x

அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுக்குழுவின் ஒட்டுமொத்த முடிவும், வேண்டுகோளும் என்னவென்றால் ஒற்றை தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவேண்டும் என்பதுதான். அந்த வேண்டுகோளின்படிதான் பொதுக்குழு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள்.

எங்களை பொறுத்தவரை சமாதான பேச்சுவார்த்தை பேசப்பட்டது. ஆனால் அவர்களாக வெளியேறி சென்றால் என்ன செய்ய?. எல்லோரையும் அரவணைத்து செல்வதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து 'அ.தி.மு.க. பிரச்சினையில் பா.ஜ.க. தலையிட்டு சமரசம் செய்கிறதா?', என நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ''பா.ஜ.க.வை பொறுத்தவரை அவர்கள் ஒரு கட்சி. அக்கட்சி என்றுமே அ.தி.மு.க.வின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது. எப்போதும் 3-ம் கட்சி எங்கள் கட்சியில் தலையிடுவதை நாங்கள் விரும்பமாட்டோம். அவர்களும் அதை விரும்ப மாட்டார்கள்'', என்று டி.ஜெயக்குமார் பதில் அளித்தார். மேலும், 'அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டிருக்கிறதே?', என்ற கேள்விக்கு, ''அதை நான் பார்க்கவும் இல்லை, கேட்கவும் இல்லை'', என்று பதில் அளித்தார்.


Next Story