அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்


அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்
x

கூத்தாநல்லூரில் அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் அ.தி.மு.க.செயல் வீரர்- வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. தலமையில் நடைபெற்றது. நகர அவைத்தலைவர் குமார், பொருளாளர் சுவாமிநாதன், முன்னாள் நகர துணை செயலாளர் உதயகுமார், மாவட்ட எம். ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமது அஸ்ரப், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆர்.காமராஜ் எம். எல்.ஏ.பேசியதாவது:-

அ.தி.மு.க. பல்வேறு கால கட்டங்களில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்த இயக்கம். தற்போது இந்த இயக்கம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணி வகுத்து நிற்கிறது. இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

பெண்களுக்கான திட்டங்கள்

அ.தி.மு.க. ஆட்சியில்தான் ஏழை-எளிய பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை, காலணி உள்பட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விவசாயிகள் மற்றும் அனைத்து மக்களும் பயன் அடையும் வகையில் தொலைநோக்கு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. கூத்தாநல்லூர் பகுதி மக்கள் நீடாமங்கலம் தாலுகா அலுவலகம் சென்று வருவதில் உள்ள சிரமத்தை போக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கூத்தாநல்லூரை தனி தாலுகாவாக அறிவித்து செயல்படுத்தினார். அதேபோல புதிய நகராட்சி அலுவலகம், பாய்க்காரத்தெரு பாலம், அம்மா உணவகம், 24 வார்டுகளில் தார்ச்சாலை, குடிநீர், பொது சுகாதார மற்றும் அடிப்படை வளர்ச்சி திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில்தான் செயல்படுத்தப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.யும், அமைப்பு செயலாளருமான கோபால், நகர துணை செயலாளர் ரேணுகா வல்லரசன், நிர்வாகிகள் முகமது மைதீன், கண்ணையன், கருணாநிதி, ரகுபதிபாண்டியன் மற்றும் நகர முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார். முடிவில் நகர துணை செயலாளர் கொய்யா மீராமைதீன் நன்றி கூறினார்.










Next Story