5 மாவட்டங்களில் செமஸ்டர் தேர்வுகள் 23-ந்தேதி வரை ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்


5 மாவட்டங்களில் செமஸ்டர் தேர்வுகள் 23-ந்தேதி வரை ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
x

கோப்புப்படம்

இந்த வாரம் முழுவதும் நடைபெற இருந்த தேர்வுகளையும் ஒத்திவைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு இருக்கிறது.

சென்னை,

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெரும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் கடந்த 18, 19-ந்தேதிகளில் இந்த 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் வரும் இணைப்பு கல்லூரிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்த வாரம் முழுவதும் நடைபெற இருந்த தேர்வுகளையும் ஒத்திவைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள இணைப்பு கல்லூரிகளுக்கும், நாகர்கோவில் மையத்தில் உள்ள தொலைதூர கல்வித் திட்டத்துக்கும் வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story