ஆதிகுமரகுருபர சுவாமிகள் ஆராதனை விழா
ஆதிகுமரகுருபர சுவாமிகள் ஆராதனை விழா
தஞ்சாவூர்
திருப்பனந்தாள்:
திருப்பனந்தாள் காசி திருமடத்தில் ஆதி குமரகுருபர சுவாமிகள் ஆராதனை விழா நடைபெற்றது. விழாவையொட்டி தியாகராஜ ஓதுவார், செந்தில்குமார் ஓதுவார் ஆகியோர் திருமுறை பாடினர். இதில் காசி திருமடம் இளவரசு சபாபதி தம்பிரான் சுவாமிகள் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து சொக்கநாதர் வழிபாடும், குமரகுருபரர் பிரபந்த திரட்டு முற்றோதலும் நடந்தது. பின்னர் குருமூர்த்தங்களில் சிறப்பு ஆராதனை வழிபாடுகளும், குமரகுருபர சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடும் நடந்தது. இதில் காசி திருமடம் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். விழாவில் தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story