ஆதிகேசவ பெருமாள் திருவீதி உலா


ஆதிகேசவ பெருமாள் திருவீதி உலா
x

தேசூரில் ஆதிகேசவ பெருமாள் திருவீதி உலா நடந்தது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் நகரின் பஜார் வீதியில் உள்ள எத்திராஜ் வள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆவணி மாத பிறப்பு முன்னிட்டு திருவிழா நடந்தது.

காலையில் எத்திராஜ் வள்ளி தாயார், ஆதிகேசவ பெருமாள், பூதேவி தாயார் ஆகிய சாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவை மூலம் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

பின்னர் உற்சவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

இதையடுத்து உற்சவமூர்த்தியான ஸ்ரீதேவி, பூதேவி, ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து டிராக்டரில் வைத்து நகரில் முக்கிய வீதியின் வழியாக திருவீதி உலா நடந்தது.

அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி ஆதிகேசவ பெருமாளை வரவேற்றனர். பின்னர் சாமி கோவிலை வந்து அடைந்த பின்னர் மகாதீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை தென்தின்னலூர் ஆசிரியர் வரதன், பால்காரர் வெங்கடேசன் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story