பட்டா கோரி ஆதிதிராவிடர் விதவை பெண்கள் கலெக்டரிடம் மனு


பட்டா கோரி ஆதிதிராவிடர் விதவை பெண்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

3 தலைமுறையாக வசித்துவரும் இடத்துக்கு பட்டா கோரி ஆதிதிராவிடர் விதவை பெண்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பரசலூர் ஊராட்சி மகாராஜபுரம் கிராமம் அவ்வையார் தெருவில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த, கணவனை இழந்த விதவைப்பெண்கள் 30 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் கைம்பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த 3 தலைமுறைகளாக தாங்கள் வசித்து வரும் இடத்துக்கு பட்டா இல்லாததால், அரசின் எந்த நலத்திட்ட உதவிகளையும் பெற முடியவில்லை, எனவே அந்த இடத்துக்கு குடியிருப்பு மனைப்பட்டா வழங்கி அரசு வீடு கட்டி தர வேண்டும் என கூறி இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story