திருச்செந்தூரில் ஆதிதிராவிடர் பறையர் சமுதாயத்தினர் உண்ணாவிரத போராட்டம்


திருச்செந்தூரில் ஆதிதிராவிடர் பறையர் சமுதாயத்தினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் ஆதிதிராவிடர் பறையர் சமுதாயத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தங்களிடம் ஒப்படைக்கை வலியுறுத்தி நேற்று ஆதிதிராவிடர் பறையர் சமுதாய மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பறையர் சமுதாய பட்டா இடம்

நெல்லை சாலையில் திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி ஆதிதிராவிடர் பறையர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட 79 சென்ட் பட்டா நிலத்தை பாதைக்காக தனியார் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அந்த பட்டா இடத்தை முழுமையாக ஆதிதிராவிடர் சமுதாய மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதம்

சுதந்திர தினமான நேற்றும் மேற்கண்ட ேகாரிக்கையை வலியுறுத்தி திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி ஆதிதிராவிடர் பறையர் சமுதாய சங்கம் சார்பில் சங்க தலைவர் பட்டணம் கணேசன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கலந்து கொண்டவர்கள்

இதில், துணை தலைவர்கள் ராஜாநேரு, முரசு தமிழப்பன், தொழிலதிபர் உடன்குடி தர்மராஜ், தமிழ்நாடு திருக்கோவில் முதுநிலை பணியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் தோப்பூர் சேகர், அகில இந்திய தலித் மக்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் சின்னத்துரை பாண்டியன், தமிழ் நாடு ஆதிதிராவிடர் நலச்சங்கம் மாநில தலைவர் பிரேம்குமார், சங்கத்தின் சட்ட ஆலோசகர் ராஜ்குமார், உடன்குடி நகர பஞ்சாயத்து கவுன்சிலர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story