ஆதிதிராவிட பறையர் சமுதாய ஆலோசனை கூட்டம்


ஆதிதிராவிட பறையர் சமுதாய ஆலோசனை கூட்டம்
x

திருச்செந்தூர் அருகே ஆதிதிராவிட பறையர் சமுதாய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்துர்:

திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் கிராமத்தில் உள்ள பகவான் புத்தர் இல்லத்தில் ஆதிதிராவிட பறையர் சமுதாய ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருச்செந்தூர் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு சங்க தலைவர் முரசுதமிழப்பன் தலைமை தாங்கினார்.

ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருச்செந்தூர் டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அவரது முழு உருவ வெண்கல சிலை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கக்கோரி வருகிற ஏப்ரல் 16-ந் தேதி திருச்செந்தூரில் ஆதிதிராவிடர் பறையர் சமுதாய மக்கள் சார்பில் மாபெரும் கோரிக்கை பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்கா திறப்பு விழா கல்வெட்டை அகற்றிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆதிதிராவிடர் பறையர் சமுதாய மக்களின் அனைத்து ஊர்களிலும் கண்டன பெயர் பலகை அமைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக கோவில் முதுநிலை பணியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் தோப்பூர் சேகர், அகில இந்திய தலித் மக்கள் பாதுகாப்பு பேரவை நிறுவனர் சின்னத்துரை பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், ஊர் தலைவர்கள் பாண்டித்துரை, காசி, ராஜ், முருகேசன், சங்கர், மாடசாமி, அகத்தியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நா.முத்தையாபுரம் டாக்டர் அம்பேத்கர் மன்ற தலைவர் ஞானகுமார் நன்றி கூறினார்.


Next Story